மேச்சேரியில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய பெண் கைது
மேச்சேரியில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
மேச்சேரி:
மேச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று மதியம் ஒரு பெண் நகை வாங்க வந்துள்ளார். அந்த பெண் நகை வாங்குவது போன்று ஒவ்வொரு நகையாக எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு பவுன் கம்மலை ஊழியர்களை திசைதிருப்பி மறைத்து வைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளார். இதை கவனித்த ஊழியர்கள், அவரை கையும் களவுமாக பிடித்து மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஈசல்பட்டியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி கவுரி (வயது 37) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை வாங்குவது போல் நடித்து நகையை திருடிய கவுரியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story