அரசிராமணி, சங்ககிரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
அரசிராமணி, சங்ககிரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.
சேலம்:
தேவூர் அருகே அரசிராமணி ஒடசக்கரை பகுதியில் அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் 15 சென்ட் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து சங்ககிரி தாசில்தார் பானுமதி உத்தரவின் பேரில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், அரசிராமணி கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், கிராம உதவியாளர் வேலுமணி, உள்ளிட்ட வருவாய் துறையினர் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதே போல சங்ககிரி முனியப்பம் பாளையத்தில் அரசு ஓடைபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் பானுமதி உத்தரவின் பேரில் சங்ககிரி வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் பிரபு ஆகியோர் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் மஞ்சக்கல்பட்டியிலும் 1 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story