மேட்டூர் அருகே பாலியல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை
மேட்டூர் அருகே பாலியல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டூர்:
மேட்டூர் கருமலைக்கூடல் அருகே உள்ள கருப்பு ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம் ஒரு சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. பாலியல் புகார் என்பதால் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பரமசிவம் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்தார். இதனிடையே கடந்த 4-ந் தேதி விஷ மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி பரமசிவம் உயிரிழந்தார். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story