சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்ல வந்த பயணி திடீர் சாவு
சென்னை விமான நிலையத்தில் மும்பை செல்ல வந்த பயணி திடீரென உயிரிழந்தார்.
ஆலந்தூர்,
பீகார் மாநிலம் பாட்னாவை சோ்ந்தவா் சுரேந்திர சவுத்ரி (வயது 50). இவர் சுயதொழில் செய்து வந்தார். இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சீத்தா(46)வுடன் சென்னை வந்தார். பின்னர் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்ட சுரேந்திர சவுத்திரியை, மும்பையில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து சுரேந்திர சவுத்ரி, தனது மனைவி சீத்தாவுடன் வேலூரில் இருந்து மும்பை செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் வந்தார். விமான நிலைய போா்டிகோவில் அமா்ந்திருந்த சுரேந்திர சவுத்ரி திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினா் விரைந்து வந்து அவரை பரிசோதித்தனா்.
அதில் சுரேந்திர சவுத்ரி கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதை கேட்ட அவருடைய மனைவி சீத்தா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதாா். பின்னர் சென்னை விமான நிலைய போலீசார் சுரேந்திர சவுத்ரி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story