தேங்காய் விலை கடும் வீழ்ச்சி


தேங்காய் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 7 May 2022 4:01 PM IST (Updated: 7 May 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி

ல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. உரம், பூச்சி மருந்து, போன்ற மூலப்பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  இதுகுறித்து தென்னை விவசாயி வேல்மணி கூறும்போது  தற்போது தேங்காய் விலை குறைந்துள்ளது.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு தேங்காய் ரூ. 20க்குவிற்பனையானது.  தற்போது ரூ. 10 ஆக குறைந்துள்ளது. தேங்காய் விலை வீழ்ச்சி, எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்றார். 

Next Story