சீர்காழி அருகே படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு


சீர்காழி அருகே  படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 8 May 2022 12:30 AM IST (Updated: 7 May 2022 5:35 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

சீர்காழி:-

சீர்காழி அருகே படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர். 

பலத்த காற்று

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்த கந்தன், ரமேஷ், சூரன், சின்னையா, வல்லரசு, மாரியப்பன், சித்திரவேல் உள்ளிட்டோருக்கு சொந்தமான 20 படகுகளில் 120-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
நள்ளிரவு நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் கந்தன், ரமேஷ், சூரன் ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகள் கடலில் கவிழ்ந்தன. இதன் காரணமாக படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். 

மீட்பு

அவர்களை உடன் இருந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். தொடர்ந்து கடலில் மூழ்கிய 3 படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். 
இதில் 2 படகுகள் மீட்கப்பட்ட நிலையில் 3-வது படகை மீட்கும் பணியில் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story