ரூ8 கோடியில் 34 நகர்ப்புற மையங்கள் கட்டுமான பணி


ரூ8 கோடியில் 34 நகர்ப்புற  மையங்கள் கட்டுமான பணி
x
தினத்தந்தி 7 May 2022 5:40 PM IST (Updated: 7 May 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

ரூ8 கோடியில் 34 நகர்ப்புற மையங்கள் கட்டுமான பணி

திருப்பூர் மாநகரில் ரூ.8 கோடியில் புதிதாக 34 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு மேயர் தினேஷ்குமார் கூறினார்.
சாதனை மலர் வெளியீடு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாநகராட்சியின் சாதனை மலர் வெளியீட்டு விழா நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேயர் தினேஷ்குமார், ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் ஓராண்டு சாதனை குறித்த ஒட்டுவில்லையை மாநகராட்சி வாகனங்களில் மேயர் ஒட்டினார்.
நமக்கு நாமே திட்டம்
பின்னர் மேயர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது
நமக்கு நாமே திட்டத்தில் சாலைகள், கால்வாய் மற்றும் வடிகால் அமைத்தல், மயானம் அமைத்தல், கூடுதலாக ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் அமைத்தல், மாநகராட்சி பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டுதல், மருத்துவமனை வளாகத்தில் மருந்து சேமிப்பு கிடங்கு அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநகராட்சியின் பங்களிப்பு தொகையாக ரூ.3 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.2 கோடியே 3 லட்சத்து 52 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.5 கோடியே 36 லட்சம் மதிப்பில் 10 பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மாநகரில் ரூ.22 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மாநகர பொதுசுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.
34 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
மாநகரில் 34 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு ரூ.8 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு 11 ஆயிரத்து 693 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் மூமாக 1,603 பேருக்கு அதிநவீன மருத்துவ ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story