மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மடத்துக்குளம் தாலுகா கழுகரையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரைத்திருவிழா நடத்தப்படும். கடந்த வாரம் நோன்பு சாட்டுதலுடன் மாரியம்மன் கோவில் சித்திரைதிருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டனர். இதற்கு அடுத்ததாக பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இறுதியாக சப்பாரத்தில் மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. முக்கிய தெருக்களில் வழியாக சப்பரம் பக்தர்கள் சுமந்து சென்று திரும்பினர். பல இடங்களில் பக்தர்கள் வழிபட்டனர். நிறைவில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இந்த திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story