திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் தரமற்ற நிலையில் சிக்கன் விற்ற 10 ‘ஷவர்மா’ கடைகளுக்கு அபராதம்


திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் தரமற்ற நிலையில் சிக்கன் விற்ற 10 ‘ஷவர்மா’ கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 May 2022 6:27 PM IST (Updated: 7 May 2022 6:27 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் தரமற்ற நிலையில் சிக்கன் விற்ற 10 ‘ஷவர்மா’ கடைகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

கேரளாவில் ஷவர்மா உட்கொண்டதால் மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தஞ்சையிலும் ஷவர்மா உட்கொண்ட 3 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் சிக்கன் தரமற்ற முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திருவொற்றியூர், மணவாளநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த 3 நாட்களாக 60-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தரமற்ற நிலையில் சிக்கன் வைத்திருந்த ஷவர்மா விற்ற 10 கடைகள் மீது தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி. நாயுடு சாலை, பஜார் வீதி, மணவாளநகர் போன்ற பகுதிகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story