வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு


வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 8 May 2022 12:00 AM IST (Updated: 7 May 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

குத்தாலம்:-

குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் உக்தவேதீஸ்வரர் கோவிலுக்கு எதிரே உள்ள தேரடி விநாயகர் எனப்படும் வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story