முன்னாள் ராணுவ வீரர் சாவு
மன்னார்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற பசுமாடும் உயிரிழந்தது.
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற பசுமாடும் உயிரிழந்தது.
அறுந்து கிடந்த மின்கம்பி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மேலவாசல் பகுதியில் உள்ள வயல்வௌியில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி(வயது 55). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று காலை வயல்வெளியில் தனது பசு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார்.
மின்சாரம் தாக்கி பரிதாப சாவு
இதில் மின்சாரம் தாக்கி உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பசுமாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவரது உறவினர்கள் மற்றும் போலீசார் உமாபதியின் உடலை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் மேலவாசல் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story