கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்


கள்ளக்காதலனுடன் சேர்ந்து  கணவரை கொன்ற பெண்
x
தினத்தந்தி 7 May 2022 7:14 PM IST (Updated: 7 May 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்

ல்லடம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தொழிலாளியை அவருடைய மனைவியே கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக மனைவியின் கள்ளக்காதலன் உள்பட  6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தொழிலாளி கொலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் கோபால் வயது  35. இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு  10 வயதில் ஒரு மகளும்,  7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கோபால் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே  அருள்புரம் செந்தூரன் காலனியில் குடியிருந்து பனியன் நிறுவன தொழிலாளியாக வேைல செய்து வந்தார். இவர் கடந்த  4ந் தேதி பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.  இந்த கொலை குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் 4 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். 
6 பேர் கைது
 அதன்படி பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு  வெற்றிச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து சுசீலா வேலை பார்த்த பனியன் நிறுவன மேலாளரான  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் மாரிஸ் என்கின்ற மாரீஸ்வரன் 26, கூலிப்படையைசேர்ந்த கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அன்பழகன் மகன் கிடா என்கிற வினோத்28, அவனது நண்பர் குளித்தலையைச் சேர்ந்த விஜய்  25 மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த ஆனந்தன் மகன் மதன்குமார் 21 குளித்தலையைச் சேர்ந்த நடராஜன் மகன் லோகேஸ்வரன் 20 சிவகங்கையைசேர்ந்த மதி மகன்  மணிகண்டன் 24 ஆகிய 6 பேரையும் கைதுசெய்தனர். 
இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட  மாரீஸ்வரன் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு
உல்லாசம்
நான் பல்லடம் பகுதியில் உள்ள  பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனத்தில் கோபால் மனைவி சுசீலாவும் வேலைக்கு சேர்ந்தார். நான் சுசீவிடம் முதலில் நட்பாக பழகினேன்.  அப்போது சுசீலாவின் வசீகர அழகு என்னை வலிந்து இழுத்தது. அவரை அணைத்து அனுபவிக்க துடித்தேன்.அவரும் இசைந்தார்.  அதன்பின்னர் இருவரும் அவ்வப்போது சந்தித்து உல்லாசபுரிக்கு சென்றோம். அதன்பின்னர் என்னுடன் வந்து விடு, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சுசீலாவிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். ஆனால்...  கணவர் கோபால்  தடையாக இருக்கிறாரே என்றார். அவருக்கு முடிவுரை எழுதி விட்டால் நம் முன்னுரை எழுதாலாம் என்றேன். அதன்பின்னர் இருவரும் சந்தோசமாக வாழலாம் என கூறினார். 
இதையடுத்து கோபாலை கொலை செய்த தீட்டம் தீட்டினோம். இதற்காக கூலிப்படையை நாடினோம். அதன்படி கோபாலை கொலை செய்ய கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த கூலிப்படை தலைவன்   அன்பழகன் மகன் கிடா என்கிற வினோத்தை எங்களது பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளிமூலமாக சந்தித்தோம்.அவர் கோபாலை கொலை செய்ய    ரூ.6 லட்சம் கூலி கேட்டார்.  அதன்படி முன்பணமாக அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்தேன். மீதி பணத்தை  ஒரு மாதத்தில் தருவதாக கூறினேன்.  ஆனால் பணம் வந்தவுடன் தான் கொலை செய்வேன் என அவர் உறுதியாக சொல்லிவிட்டார். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கடந்த மாதம் 30-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து  50 ஆயிரம் கொடுத்தேன்.  கொலை செய்து முடித்தவுடன் மீதி 50 ஆயிரத்தை தருவதாக சொல்லி கூறினேன்.  
திட்டம் தீட்டி கொலை செய்தோம்
அதன்படி இரவு நேரத்தில் கோபாலை கொலை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் வேலை முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் வரும்போது சம்பவம் நடந்தால் எல்லோரும் பார்ப்பார்கள் என்பதால் அவரை வேலை முடியும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரவழைக்க திட்டமிட்டோம். 
அதன்படி கடந்த 4-ந தேதி  சுசிலா தனது கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு துணி எடுக்க திருப்பூர் சென்று வரலாம் என்றும் இரவு 8 மணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். இதற்கு கோபாலும் சம்மதித்து வந்துவிடுகிறேன் என்று சொல்லியுள்ளார். கணவர் கோபால் 8மணிக்கு வருவதை உறுதி செய்த சுசிலா என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இந்த விபரத்தை கூலிப்படையை ே சர்ந்த வினோத்திடம் ெ தரிவித்தேன். இதையடுத்து வினோத்தும்,  அவருடன் தங்கி இருந்த  விஜய்யும் வந்து  இரவு  8 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த கோபாலை கத்தியால் குத்தி கொலை செய்தனர். கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்ததால் என்னை கைது செய்து விட்டனர். 
இவ்வாறு மாரிஸ்வரன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
மனைவி தலைமறைவு 
இதையடுத்து கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். 
அப்போது கொலையான  கோபாலின் மனைவி சுசீலாவும், அவரது கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கோபாலை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தலைமறைவான சுசீலாவை போலீசார் தேடி  வருகிறார்கள். 

Next Story