3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 7 May 2022 7:17 PM IST (Updated: 7 May 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தலைமை ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சின்னகொல்லாபட்டி பகுதியை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (வயது 57). இவர், கோவில்பட்டி இளையரசனேந்தல் பகுதியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தாமஸ் சாமுவேலை கைது செய்தனர். இதேபோல் கயத்தாறு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், கயத்தாறு அய்யனாரூத்து பகுதியை சேர்ந்த குருசாமி (55) என்பவரை கோவில்பட்டி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்
மேலும் நாகலாபுரம் பஸ்நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கோவில்பட்டி வக்கீல் தெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் மகாராஜா (32) என்பவரை சங்கரலிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் தாமஸ் சாமுவேல், குருசாமி, மகாராஜா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story