மாநில கபடி போட்டி
விளாத்திகுளம் அருகே மாநில கபடி போட்டி நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கடற்கரை கிராமமான வேம்பாரில், நேற்று மாநில அளவிலான மாபெரும் கடற்கரை கபடிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தொடங்கி வைத்தார். நண்பகலில் ஏராளமான கபடி ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், கபடி வீரர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக விளையாடி, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்.
போட்டியில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கபடி அணியினர் கலந்துகொண்டனர். இதில் வேம்பார் கடல்புறா கபடி அணியினருக்கும் - திண்டுக்கல் காந்திகிராம் அணியினருக்கும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், காந்திகிராம் அணியினர் 3 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இப்போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கபடி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
Related Tags :
Next Story