மரக்கன்றுகள் நடும் விழா


மரக்கன்றுகள் நடும் விழா
x
தினத்தந்தி 7 May 2022 7:45 PM IST (Updated: 7 May 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

மரக்கன்றுகள் நடும் விழா

கூடலூர்

கூடலூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் இன்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிமளா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஆணையாளர் ராஜேஸ்வரன், கவுன்சிலர் வர்கீஸ் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை பணியாளர்கள் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகளை நட்டனர்.  

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் கூறும்போது, நகராட்சி பகுதியில் மகோகனி உள்பட 500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார். விழாவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story