குதிரை பந்தயம் ஒத்திவைப்பு


குதிரை பந்தயம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 May 2022 7:45 PM IST (Updated: 7 May 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

குதிரை பந்தயம் ஒத்திவைப்பு

ஊட்டி

ஊட்டியில் கோடை சீசனின்போது சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குதிரை பந்தயம் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று 7-வது நாள் பந்தயம் நடைபெற இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

குதிரைகளுக்கு தினமும் காலை, மாலை பயிற்சி அளிக்கப்பட்டதோடு சத்தான உணவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக நேற்று நடக்க இருந்த குதிரை பந்தயம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே குதிரை பந்தயம் ஒத்திவைப்பு குறித்த தகவல் சுற்றுலா பயணிகளுக்கு சரியாக தெரியவராததால் நேற்று ஏராளமானோர் குதிரை பந்தய மைதானத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.


Next Story