வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில்  வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2022 8:00 PM IST (Updated: 7 May 2022 8:00 PM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லன் மகன் ஆனந்தராஜ் (வயது 26) கூலித்தொழிலாளி. இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் திருமணம் ஆவதில் அவருக்கு தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த ஆனந்தராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேவதானப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 
இதுபோல மயிலாடும்பாறை அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (56). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த இவர் மதுவிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story