பெரும்பான்மை இல்லையென இணை கையொப்பம் இடும் அதிகாரம் பறிப்பு


பெரும்பான்மை இல்லையென இணை கையொப்பம் இடும் அதிகாரம் பறிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 8:06 PM IST (Updated: 7 May 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

அப்பநல்லூர் ஊராட்சியில் பெரும்பான்மை இல்லையென இணை கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக துணைத்தலைவர் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருவண்ணாமலை

மேற்கு ஆரணி ஒன்றியம் அப்பநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்தார்த்தன் இன்று 5 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

அப்பநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக எந்த குற்றச்சாட்டு இல்லாமலும், எந்தவிதமான நிதிமுறைகேடு, நிதி இழப்பு போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் நேர்மையான முறையில் என்னுடைய பணியை செய்து கொண்டிருந்தேன். 

ஆனால் துணைத்தலைவருக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி எனக்கு இணை கையொப்பம் இடும் அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஊராட்சி மன்றத்தில் எந்தவிதமான தீர்மானமும் இல்லாமல் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது. 

இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டால் எந்தவிதமான பதிலும் எழுத்துப்பூர்வமாக என்னிடம் வழங்கவில்லை. 

மேலும் மன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை நிருபிக்க நான் தயாராக உள்ளேன். எனவே இந்த மனு மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எனவே துணைத்தலைவராகிய எனக்கு மீண்டும் காசோலை மற்றும் ஊராட்சியின் பதிவேடுகளில் இணை கையொப்பம் இடும் வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story