மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கார் மோதியது
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் அசோக்குமார் (வயது 28), திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இவர் விடுமுறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான கோவில் மேட்டுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் அசோக்குமார் இன்று கடம்பை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
டீசல் வாங்கிக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வாலிபர் சாவு
இதில் அசோக்குமார் கால் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், உபயதுல்லாகான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story