இன்ஸ்பெக்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்


இன்ஸ்பெக்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 7 May 2022 8:24 PM IST (Updated: 7 May 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்பெக்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித். இவர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தை மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா பஜார் காவல் நிலையத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.  ஏர்வாடி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் மற்றொரு இன்ஸ்பெக்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப் பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story