மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2022 9:24 PM IST (Updated: 7 May 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே அருணாச்சலபுரம் கிராமத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி
எட்டயபுரம் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 55). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தார். பாலமுருகனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும், பாலமுருகனுக்கு உடல்நிலை சரியாகவில்லை.

தற்கொலை
இதனால் மன விரக்தியில் இருந்த பாலமுருகன் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறிது நேரத்தில் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை எட்டயபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story