தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 May 2022 10:02 PM IST (Updated: 7 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வேகத்தடை அமைக்கப்படுமா?
ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு செல்லும் சாலையில் இருந்த வேகத்தடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு விட்டன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-நந்தகோபால், ஆண்டிப்பட்டி.
குண்டும், குழியுமான சாலை
வடமதுரையில் இருந்து சேர்வைக்காரன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-ராஜா, வடமதுரை.
சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே ஊத்து எனும் இடத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து விட்டது. பலத்த காற்று வீசும் போது அது முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனடியாக மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்செல்வன், கெங்குவார்பட்டி.
குப்பை குவியல்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள சின்னையாபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும் குப்பைகளை அகற்றாமல் தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் கரும்புகையால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அங்கு வசிக்கும் மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
-குமார், திண்டுக்கல்.
எரியாத தெரு விளக்குகள்
ஒட்டன்சத்திரம் தாலுகா புளியமரத்துகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சுங்கப்பன்பட்டியில் தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இரவு இரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் உள்ளது. எனவே சுங்கப்பன்பட்டியில் பழுதான தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
-வெங்கடாசலபதி, சுங்கப்பன்பட்டி.

Next Story