நாகரசம்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்-13 பேர் மீது வழக்கு


நாகரசம்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்-13 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 May 2022 10:06 PM IST (Updated: 7 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

நாகரசம்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்ட 13 பேர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


காவேரிப்பட்டணம்:
நிலப்பிரச்சினை
நாகரசம்பட்டியை அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (41). இவர்கள் இருவரது நிலங்களும் அருகருகில் உள்ளன. இவர்கள் நிலங்களுக்கான நடைபாதை பிரச்சினை கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் டிராக்டரில் சென்ற விஜயகுமாரை தடுத்து நிறுத்திய முனியம்மாள் தரப்பினர் அவரை கற்கள் மற்றும் கொடுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். இதேபோல விஜயகுமார் தரப்பினரும் பதிலுக்கு பயங்கர ஆயுதங்களால் தாக்கினார்கள்.
13 பேர் மீது வழக்கு
இதில் காயமடைந்தவர்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை மற்றும் கோவை, பெங்களூரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விஜயகுமாரின் தந்தை கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் முனியம்மாள், கருணாநிதி (55), பார்வதி (45), பழனி (56), மாது (45), ராணி (35) ஆகிய 6 பேர் மீது நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே போல முனியம்மாள் தரப்பில் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சரசு (72), கவிதா (42), ரமணி (30), ரகுபதி (45), ராஜ்குமார் (35), விஜயகுமார் (40), பழனி (56) ஆகிய 7 பேர் மீது நாகரசம்பட்டி போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல், கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிலப்பிரச்சினையில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story