மதுபான பாரில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்; உரிமையாளருக்கு அபராதம்


மதுபான பாரில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்; உரிமையாளருக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 May 2022 10:08 PM IST (Updated: 7 May 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் மதுபான பாரில் வைத்திருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி பல்வேறு இடங்களில் குடிநீர் பாட்டில்களும், குளிர்பான பாட்டில்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு கடைகளிலும், சந்தைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக மதுபான பார்களில் குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் நாராயணன் உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் அரவிந்த், சுகாதார ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு மதுபான பாரில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 200-க்கும் மேற்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாரின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story