எதிர்கால தேவைக்கு ஏற்ப மேலும் 2 குடிநீர் திட்டங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில், எதிர்கால தேவைக்கு ஏற்ப மேலும் 2 குடிநீர் திட்டங்களை கொண்டு வருவதற்கு ஆய்வு நடந்து வருகிறது என்று கலெக்டர் விசாகன் கூறினார்.
திண்டுக்கல்:

கையேடு வெளியீடு
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன் கையேட்டை வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் சரவணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து கலெக்டர் விசாகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஓராண்டில் முதல்வரின் முகவரி திட்டத்தில் 35 ஆயிரத்து 952 மனுக்கள் பெறப்பட்டு, 23 ஆயிரத்து 391 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்மூலம் 1,479 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 606 பேருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் 1,067 பேருக்கு ரூ.12 கோடியே 48 லட்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நகைக்கடன் தள்ளுபடி
மேலும் 6 லட்சத்து 26 ஆயிரத்து 171 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் கொரோனா நிவாரணம், 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த 260 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில் 53 ஆயிரத்து 676 பேருக்கு ரூ.204 கோடியே 15 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் 5 ஆயிரத்து 907 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டது.
மேலும் இல்லம்தேடி கல்வி திட்டத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 18 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு 7 ஆயிரத்து 692 பெண் தன்னார்வலர்கள், 17 ஆண் தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது.
இதுதவிர இலவச பஸ் பயண திட்டத்தில் இதுவரை 3 கோடியே 10 லட்சம் பெண்கள், 16 ஆயிரத்து 47 திருநங்கைகள், 2 லட்சத்து 66 ஆயிரத்து 641 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனர்.
குடிநீர் திட்டம்
இதற்கெல்லாம் ஊரக வளர்ச்சி முகமை மூலம் 21 நாட்களில் 605 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. அதன்மூலம் 10 கோடியே 30 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்க முடியும்.
சிறுமலையில் ரூ.53 லட்சம் செலவில் புதிதாக தடுப்பணை அமைத்து செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி, நகராட்சிகள், மாநகராட்சிகளில் வினியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவு, தேவைப்படும் குடிநீரின் அளவு ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ரூ.930 கோடியில் ஆழியாறு குடிநீர் திட்டம், ரூ.95 கோடியில் காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதுதவிர மேலும் 2 குடிநீர் திட்டங்களை கொண்டுவர ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த ஓராண்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story