கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் ரோந்து


கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் ரோந்து
x
தினத்தந்தி 7 May 2022 10:26 PM IST (Updated: 7 May 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் ேராந்து பணியில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் மத்திய அதிவிரைவு படையினர் முகாமிட்டுள்ளனர். கோவையில் இருந்து வருகை தந்த மத்திய அதிவிரைவு படையினர் 15 பேர், துப்பாக்கி ஏந்தியபடி கொடைக்கானல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் பதற்றமான பகுதிகள் உள்ளதா? என்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் பாதுகாப்பு மேற்கொள்வது குறித்தும், மத கலவரங்களை தடுப்பது குறித்த பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், கொடைக்கானலில் அவசர காலத்தில் அதிவிரைவு படையினர் விரைந்து வருவது பற்றியும் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல் நகர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களிலும் ஆய்வு நடத்தி, இது தொடர்பாக வரைபடத்துடன் கூடிய அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று அதிவிரைவு படை கமாண்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

Next Story