6 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்


6 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 7 May 2022 10:30 PM IST (Updated: 7 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் அசைவ உணவகத்தில் 6 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் அசைவ உணவகங்களில் கடந்த 2 நாட்களாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம், ரவுண்டுரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு சவர்மா உணவகத்தில் 6 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருந்ததை கண்டுபிடித்து, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்காக அந்த உணவகத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு சவர்மா உணவகத்தில் சுகாதாரம் இல்லாமல் உணவு தயாரிப்பது தெரியவந்தது.
இதனால் அந்த உணவகத்துக்கும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுதவிர தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் உணவு வழங்கிய 4 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story