கடத்தூர் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
கடத்தூர் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே கடத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அதேபோல அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மகளிர் கழிப்பறை வளாகம் செயல்பாட்டினை பற்றி பெண்களிடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடமும் கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வக்குமரன், ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் பேபிஅய்யாசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சமுத்து, ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story