சாலையோரத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றம்


சாலையோரத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 8 May 2022 12:00 AM IST (Updated: 7 May 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம், தேவன்குடி, மத்தியக்குடி, வடகுத்தாலம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது.இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கைகள் விடுத்தனர். உடனடியாக சாலையோரம் இருந்த கருவேல மரங்களை அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் உத்தரவிட்டார். அதன்பேரில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபைதா ராஜேஷ் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் பொக்லின் எந்திரம் உதவியுடன் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story