சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவம்
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் வேதமந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கும் சாமிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்லக்கில் சாமி வீதிஉலா நடைபெற்றது.
கருடசேவை
விழாவில் தினசரி பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது. மேலும் 11-ந்தேதி கருடசேவையும், 15-ந்தேதி காலை 4.30 மணி அளவில் தேரோட்டமும் நடைபெறுகிறது.
மேலும் 16-ந்தேதி காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும், 17-ந்தேதி புஷ்பயாகம், 18-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story