வாகன விபத்தில் கோவில் காளை சாவு
சிங்கம்புணரி அருகே வாகன விபத்தில் கோவில் காளை பரிதாபமாக இறந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே காளாப்பூர் ஊராட்சியில் கட்டபுளி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் காளை சண்டியர் பல ஊர்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உள்ளது. இந்த நிைலயில் நேற்று முன்தினம் இரவு காளாப்பூர் சாலை வழியாக கோவில் காளை சென்ற போது வாகன விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த காளையை அப்பகுதி மக்கள் மீட்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்டியர் காளை இறந்தது. இறந்த சண்டியர் காளையை காளாப்பூர் கொண்டு வந்து கட்ட புளி கோவில் முன்பு வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமான மக்கள் மாைல அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story