தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
காரடாச்சேரி ஒன்றியத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோாிக்கை விடுத்தனர்.
கொரடாச்சேரி;
காரடாச்சேரி ஒன்றியத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோாிக்கை விடுத்தனர்.
ஒன்றியக்குழு கூட்டம்
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் உமாப்ரியா தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், ஒன்றிய ஆணையர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் நாகூரான், சத்தியேந்திரன், ஏசுராஜ், வாசு, கவிதா, மீரா, உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஒன்றியக் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு
சத்துணவு
கொரடாச்சேரி ஒன்றியத்தில் அனைத்து தெருக்களிலும் வயல்வெளி பகுதிகளிலும் மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. பல கிராமங்களில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பிகளை சரி செய்து பழுதான மின் கம்பங்களை மாற்ற வேண்டும். கீழஉத்தங்குடியில் இருந்து உணவு சமைக்கப்பட்டு மேல உத்திரங்குடி எடுத்துச்சென்று சத்துணவு மைய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து மேல உத்திரங்குடியிலேயே உணவு சமைத்து வழங்க வேண்டும்.
அங்கன்வாடி கட்டிடம்
பெரும்புகளூரில் சுடுகாட்டுக்கு சாலை வசதியும் பொம்மநத்தம் பகுதியில் மினி குடிநீர் டேங்க் வசதியும் செய்து கொடுக்க வேண்டும். வண்டாம்பாளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சீரமைத்து தர வேண்டும். அனைத்து ஊர்களிலும் பழுதடைந்த அங்காடி, அங்கன்வாடி கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும். அங்காடி கட்டிடங்கள், சுடுகாடு கட்டிடம், ஈமக்கிரியை மண்டபம் ஆகியவை கட்டிக்கொடுக்க வேண்டும்.
கொடிமங்கலம் நடுநிலைப்பள்ளி அருகில் சுவற்றின் ஓரத்தில் செல்லும் மின்கம்பிகளை வேறு பகுதி வழியாக செல்லுமாறு மாற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.
படித்துறை
கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது
கொரடாச்சேரி ஒன்றியம் முழுவதும் எந்த பகுதியில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை உடனடியாக சரி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது பல்வேறு பணிகளுக்கு நிதி கிடைத்துள்ளது. தேவையான இடங்களில் இந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.
கூட்டத்தில் களிமேடு கிராமத்தில் தேர் திருவிழாவின் போது உயிரிழந்த 11 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள் இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வெட்டாற்றில் பத்தூர் ராக்க பெருமாள் கோவில், எண்கன், பொம்மநத்தம் ஆகிய ஊர்களில் படித்துறை கட்டவும், பாண்டவையாற்றில் நாலில் ஒன்று கிராமத்தில் படித்துறை கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story