மானாமதுரையில், புதிய தொழிற்பயிற்சி நிலையம்


மானாமதுரையில், புதிய தொழிற்பயிற்சி நிலையம்
x
தினத்தந்தி 7 May 2022 11:47 PM IST (Updated: 7 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதாக தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

மானாமதுரையில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியானதாக தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தகவல் தெரிவித்து உள்ளார்.

ஓராண்டு சாதனை மலர் வெளியீடு

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையொட்டி, “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு சாதனை மலர் வெளிட்டு விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் .வெங்கடேஸ்வரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சாதனை மலரை கலெக்டர் வெளியிட அதனை அரசு அலுவலர்கள் பெற்றுகொண்டனர். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

புதிய தொழிற்பயிற்சி நிலையம்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு சாதனை மலர் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் புதிய வேளாண்மைக் கல்லூரியை நடப்பாண்டில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையும், அடுத்த ஆண்டில் சட்டக்கல்லூரியை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் தற்போது மானாமதுரைப் பகுதியில் புதிய தொழிற் பயிற்சி நிலையம் நிறுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
காரைக்குடியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆவின் பாலகம் அமைப்பதற்கான அறிவிப்பு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரலாற்று சிறப்பு மிக்க கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், கீழடியில் அருங்காட்சி அரங்கத்திற்கான பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story