சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள்


சீறி பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள்
x
தினத்தந்தி 7 May 2022 11:49 PM IST (Updated: 7 May 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி,

கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே குருந்தம்பட்டு கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் குருந்தம்பட்டு-வேப்பங்குளம் சாலையில்  நடைபெற்றது. இதில் மொத்தம் 34 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது. 
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மலம்பட்டி காயத்ரி ஸ்டோர்ஸ் வண்டியும், 2-வது பரிசை விராமதி கருப்பையா வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி கதிரவன் வண்டியும், 4-வது பரிசை குமாரப்பட்டி விஷால்கண்ணன் வண்டியும் பெற்றது. 

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 2-வது பரிசை ஆலவிளாம்பட்டி முத்துலெட்சுமி மற்றும் மதகுபட்டி கணேஷ் போர்வெல் வண்டியும், 3-வது பரிசை அதிகரை வேங்கை வண்டியும், 4-வது பரிசை கல்லல் அழகுசுகன்யா வண்டியும் பெற்றது.
 தொடர்ந்து நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நெற்புகப்பட்டி சதீஷ்குமார் வண்டியும், 2-வது பரிசை குமாரப்பட்டி விஷால் வண்டியும், 3-வது பரிசை குருந்தம்பட்டு ஆசிரியர் ஹரிபிரசாத் வண்டியும், 4-வது பரிசை நரசிங்கம்பட்டி திருஞானம் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கிடாரிப்பட்டி கரடிசாமி வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3-வது பரிசை வெற்றியூர் சிங்கத்துரை வண்டியும், 4-வது பரிசை குருந்தம்பட்டு ஆசிரியர் ஹரிபிரசாத் வண்டியும் பெற்றது.
பாகனேரி பந்தயம்
இதேபோல் பாகனேரி அருகே நகரம்பட்டி மேலத்திருத்தி அழகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நகரம்பட்டி-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 18 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல்பரிசை நகரம்பட்டி அம்பலத்தரசு மற்றும் வாழ்ரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம்லெட்சுமி வண்டியும், 2-வது பரிசை வீழனேரி சரவணன் மற்றும் பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி கார்த்திக் மற்றும் கல்லம்பட்டி சின்னத்தம்பி வண்டியும், 4-வது பரிசை உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா மற்றும் பரவை சின்ன வேலம்மாள் வண்டியும் பெற்றது. 
பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கொட்டானிப்பட்டி வர்னிஷ்கார்த்திக் மற்றும் மதுரை பிரபு வண்டியும், 2-வது பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டி கோனார் மற்றும் திருமலை கண்ணன் வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி கரியாங்குடி காளிஜான் வண்டியும், 4-வது பரிசை நகரம்பட்டி வைரப்பன் மற்றும் பாகனேரி ராமநாதன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை ஏராளமாேனார் பார்த்து ரசித்தனர்.

Next Story