இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்
சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று பாரம்பரிய நெல் திருவிழாவில் செல்வராசு எம்.பி. கூறினாா்.
கோட்டூர்;
சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று பாரம்பரிய நெல் திருவிழாவில் செல்வராசு எம்.பி. கூறினாா்.
நெல் திருவிழா
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் இயற்கை விவசாயிகள் இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் தலைமை தாங்கினார் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தேவதாஸ், ஞானவேல், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இயற்கை விவசாயி எம்.எஸ். பாலன் வரவேற்று பேசினார். செல்வராசு எம்.பி. விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது
இயற்கை விவசாயம்
உலக மக்கள் பின்பற்றக்கூடிய சிறந்த தொழில் விவசாயம். பல இலக்கியத்தில் விவசாயத்தை பற்றிய கருத்துக்கள் அதிகம் உள்ளது. உழவுத்தொழில் இல்லை என்றால் உணவு இல்லை.
விவசாயத்தை பெருமையாக கருத வேண்டும். சீனா விவசாயத்தில் வல்லமை பெற்றுள்ளது. நமது நாட்டில் விவசாயத்தை விட ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக உள்ளது. விவசாயத்தை கடைக்கோடி தொழிலாக கருதாமல் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்து பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.
புதிய தொழில்நுட்பம்
புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செல்வராசு எம்.பி. கூறினார்.
நிகழ்ச்சியில் விதைகளே பேராயுதம் என்ற தலைப்பில் இயற்கை விவசாயி பாண்டித்துரை பேசினார். முடிவில் இயற்கை விவசாயி ஆறுமுகம் நன்றி கூறினார். முன்னதாக கோட்டூர் காந்தி சிலையிலிருந்து பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட விதைநெல் கோட்டை மாட்டுவண்டி ஊர்வலத்தை செல்வராசு எம்.பி. தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 40 வகை நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
மேலும் 1000 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story