ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டம்
ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க கூட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்டோ சம்மேளனம் மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story