கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்
கூத்தாநல்லூர் அருகே குடிதாங்கிச்சேரியில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள மின்கம்பிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே குடிதாங்கிச்சேரியில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள மின்கம்பிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாழ்வான மின்கம்பிகள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே குடிதாங்கிச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் அமைக்கப்பட்ட மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் கைகளுக்கு எட்டும் தூரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும், வீடுகளையொட்டிய தெருவில் மின் கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளதால் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மின் கம்பிகளை தொட்டு விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
இதைப்போல குடிதாங்கிச்சேரி தெருவில் 4 தெருக்களில் மின் கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளதாகவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீரமைக்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே, இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story