தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்


தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலர்கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 8 May 2022 12:03 AM IST (Updated: 8 May 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டார்.

ராணிப்பேட்டை

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டார்.

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அரசுத் துறைகளின் சார்பில், கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட விவரங்களை தொகுத்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஓராண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு-கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம், திராவிட மாடல் வளர்ச்சி திசையெட்டும் மகிழ்ச்சி’’ என்ற தலைப்பில் தயாராகியுள்ள சாதனை மலரின் வெளியீட்டு விழா ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, சாதனை மலரை வெளியிட்டார். அப்போது ஓராண்டில் தமிழக அரசு செய்துள்ள சாதனைகள், பயனாளிகளின் விவரம் குறித்து துறைவாரியாக அவர் விளக்கம் அளித்தார். 

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story