பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
நொய்யல்
நொய்யல் அருகே புங்கோடை குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி வரவேற்றார். உள்ளாட்சி பிரதிநிதிகள் சுப்பிரமணி, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளராக நொச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரிதெய்வானை கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு தலைவராக மகேஸ்வரி என்பவரும், துணைத்தலைவராக சங்கீதா என்பவரும் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர்களை ஒருமனதாக தேர்வு செய்தனர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் நொய்யல், சேமங்கி, முத்தனூர், ஒரம்புப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story