வாய்க்கால் ரதூர்வாரும் பணி மும்முரம்
வெள்ளியணை குளத்தில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் வாய்க்கால் ரூ.25 லட்சத்துக்கு தூர்வாரும் பணி மும்முரமாக நடக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளியணை,
பெரியகுளம்
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 பெரிய குளங்களில் வெள்ளியணையில் பெரிய குளமும் ஒன்றாகும். சுமார் 400 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பளவை கொண்ட இந்த குளம் நிரம்பினால் சுற்று பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்கசிவு ஏற்பட்டு, அவற்றில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரிதும் பயன்படும்.
இதேபோல் உப்பிடமங்கலத்தில் உள்ள குளமும் அதிக அளவில் நீர் தேங்கும் வகையில் உள்ளதால் அந்த பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தடையின்றி பயன்படும்.
புதர்மண்டி
வெள்ளியணை குளம் தொடர்மழை அல்லது குடகனாறு அணையிலிருந்து வரும் நீரின் காரணமாக நிரம்பினால், உபரி நீர் உப்பிடமங்கலம் பெரியகுளத்திற்கு செல்ல இங்கிருந்து வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டியும் மேடு பள்ளங்களாகவும் மாறி தூர்ந்துபோகக்கூடிய நிலையில் இருந்து வந்தது. இதனையடுத்து இப்பகுதி மக்களும் விவசாயிகளும் இந்த வாய்க்காலை தூர் வார வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதனையடுத்து தற்போது தமிழக அரசின் நீர்வளத்துறை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளியணை பெரியகுளத்தில் இருந்து உப்பிடமங்கலம் குளம் வரை சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால் உப்பிடமங்கலம் குளத்திற்கு நீர் தங்கு தடையின்றி செல்வதுடன், வாய்க்காலில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள சிறு தடுப்புகள் மூலம் தண்ணீர் தேங்கி நின்று அந்தப் பகுதியில் நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்யும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story