அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும்


அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 8 May 2022 12:06 AM IST (Updated: 8 May 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒன்றியத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

திருவாரூர்;
திருவாரூர் ஒன்றியத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
திருவாரூர் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர் அகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா கூறுகையில், திருவாரூர் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளின் தேவைகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படும். அரசு பள்ளிகளில் கழிவறை, சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொண்டு, பள்ளியின் தரம் மேம்படுத்தபடும். இவ்வாறு அவர் கூறினார். 
முதல்-அமைச்சருக்கு நன்றி
கூட்டத்தில் திருவாரூர் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டிட ரூ.3 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, திருவாரூர் ஒன்றியம் அலிவலம் சமத்துவபுர வீடுகளை சீரமைத்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடியே 63 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story