மின்னல் தாக்கி 2 சினை பசுக்கள் பலி


மின்னல் தாக்கி 2 சினை பசுக்கள் பலி
x
தினத்தந்தி 8 May 2022 12:19 AM IST (Updated: 8 May 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே மின்னல் தாக்கி 2 சினைப்பசுக்கள் இறந்தன.

சோளிங்கர்

சோளிங்கர் அருகே மின்னல் தாக்கி 2 சினைப்பசுக்கள் இறந்தன.

சோளிங்கர் மற்றும் சுற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று இடி-மின்னலுடன் திடீர் மழை பெய்தது. சோளிங்கரை அடுத்த கேசவனாக்குப்பம் கிராமத்தில் உள்ள சின்ன தெருவை சேர்ந்த முனியம்மாள் (வயது60) என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் சினையாக  இருந்தது. ஓரிரு நாளில் கன்றுக்குட்டி ஈன இருந்தது. 

2 பசுக்களையும் அவர் அருகே இருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது பெய்த மழையில் திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்கி 2 பசுக்களும் அங்கேயே இறந்து விட்டன. முனியம்மாளுக்கு வாழ்வாதாரமாக இருந்த இரண்டு பசுக்களும் மின்னல் தாக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story