தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 8 May 2022 12:24 AM IST (Updated: 8 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகள் தேங்கிய வாய்க்கால்
திருச்சி பாலக்கரையில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் குப்பைகள், ஆகாய தாமரை செடிகள், கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பாலக்கரை, திருச்சி.

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி கோனேரிப்பட்டி செல்லும் சாலையில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒருவருடாக பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.

வேகத்தடை அமைக்க வேண்டுகோள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மேல சிதேவிமங்களம் கிராமத்தில் உள்ள வளைவு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
துர்கா, மேல சிதேவிமங்களம், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் தத்தமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் இடுகாடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இறந்தவரின் உடலை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாைலயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ், தத்தமங்கலம், திருச்சி.

குளம் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம்   பிராம்பட்டி தெற்கு வ.கைகாட்டியில் அலாந்தி  குளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வ.கைகாட்டி, திருச்சி.


பஸ் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் இருந்து சமயபுரத்திற்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால் திருவெறும்பூரில் இருந்து சமயபுரம் செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி பஸ் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சச்சிதானந்தம், திருவெறும்பூர்,திருச்சி.


Next Story