பஸ்சில் பெண்ணிடம் மணிபர்ஸ் திருடியவர் கைது


பஸ்சில் பெண்ணிடம் மணிபர்ஸ் திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 12:32 AM IST (Updated: 8 May 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் பெண்ணிடம் மணிபர்ஸ் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

ஆலங்குளம்:
ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூரை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சிவசங்கரி. இவர் தனது உறவினர் முத்து என்பவருடன் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி, நெல்லை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக தங்கியிருக்கும் உறவினரை பார்க்க புறப்பட்டு சென்றார். அப்போது சிவசங்கரி அருகே ஒரு பெண் அமர்ந்து பயணம் செய்தார். ஆலங்குளம் பஸ் நிலையம் வந்ததும், சிவசங்கரி அருகே அமர்ந்திருந்த பெண் கீழே இறங்கினார்.
பின்னர் பஸ் அங்கிருந்து புறப்பட்டு ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது, சிவசங்கரி தனது கையில் இருந்த பையை பார்த்தார். அப்போது அதிலிருந்த மணிபர்ஸ் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்ஸ்சில் அவர் ரூ.2 ஆயிரம் வைத்திருந்தார்.  நடந்த சம்பவம் குறித்து கண்டக்டரிடம் சிவசங்கரி கூறவே, ஆலங்குளம் போலீஸ் நிலையம் அருகே சிவசங்கரி, முத்து ஆகியோரை இறக்கிவிட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கூறிவிட்டு சென்றனர்.
உடனே அவர்கள் பஸ் நிலையத்துக்கு சென்றனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசாரும் அங்கு விைரந்தனர். அவர்கள் சந்தேகப்படும்படியாக நின்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜீ என்பவரது மனைவி முத்துமாரி என்பது தெரியவந்தது. அவர் சிவசங்கரியிடம் பர்ஸ்சை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story