கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் ரூ.1½ லட்சம் வயர்கள் திருட்டு


கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் ரூ.1½ லட்சம் வயர்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 May 2022 12:41 AM IST (Updated: 8 May 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்கள் விற்பனை கடையில் ரூ.1½ லட்சம் வயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தா.பழூர்:

வயர்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டுமான பொருட்கள்(ஹார்டுவேர்) கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை வந்து, கடையை திறந்து பார்த்தபோது கடைக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கடையின் இடதுபக்கத்தில் சிமெண்ட் சிலாப்புகளால் ஆன பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த வழியாக கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள செம்பு கம்பிகளுடன் கூடிய வயர்களை திருடிச்சென்றது தெரியவந்தது. ஆனால் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும்  பொருட்கள் திருட்டுபோகவில்லை.
போலீசார் விசாரணை
இதகுறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, குற்றப்பிரிவு போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பு துலக்கினர். கடையின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மேல் நோக்கி திருப்பி விடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்தனர். மோப்பநாய் மலர் சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story