ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவி கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவி கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 8 May 2022 12:46 AM IST (Updated: 8 May 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி நேற்று முன்தினம் பொதுத்தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆலங்குளம் மார்க்கெட் பஸ் நிறுத்தத்துக்கு வந்த மாணவி, தேர்வு எழுதும் மையத்துக்கு மினி பஸ்சில் செல்வதற்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த மாணவியின் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர், மாணவியிடம் தேர்வு மையத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விடுவதாக கூறினார். இதையடுத்து அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் மாணவி சென்றார். ஆனால் தேர்வு மையத்துக்கு செல்லாத வாலிபர், புதுப்பட்டி சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். அப்போது அங்கு நின்ற சிலர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மாணவியை மீட்டனர்.

இதற்கிடைய அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும், ஆலங்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவியை தேர்வு மையத்துக்கு பெற்றோர், போலீசார் அழைத்து சென்றனர். 

இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி, தலைமறைவான வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Next Story