மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து குத்துச்சண்டை வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். போட்டி பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது. தொடர்ந்து நேற்றும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. போட்டி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் குத்துச்சண்டை வீரர்கள் வருகிற 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story