17 கிராமங்களில் வேளாண்மை வளர்ச்சித்திட்ட முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 கிராமங்களில் வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 கிராமங்களில் வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.
வேளாண்மைத்துறை சார்பில் 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்ட முகாம் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அரக்கோணம் ஒன்றியத்தில் தணிகை போளூர், வடமாம்பாக்கம், இச்சிபுத்தூர், ஆற்காடு ஒன்றியத்தில் தாஜ்புரா, மாங்காடு, ஆயிலம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் பாணாவரம், கோடம்பாக்கம், நெமிலி ஒன்றியத்தில் காட்டுப்பாக்கம், சித்தேரி, சோளிங்கர் ஒன்றியத்தில் ஐப்பேடு, பாண்டியநல்லூர், திமிரி ஒன்றியத்தில் வேம்பி, சென்னசமுத்திரம், வளையாத்தூர், வாலாஜா ஒன்றியத்தில் நவ்லாக், நரசிங்கபுரம் என மொத்தம் 17 இடங்களில் நடக்கிறது.
முகாமில் வேளாண்மை, ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை, பொதுப்பணி, கைத்தறி மற்றும் துணிநூல், வேளாண்மை பொறியியல் என பல்ேவறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பங்ேகற்று விவசாயிகள் பயன்பெற விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர் கடன் வழங்குதல் மற்றும் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த உள்ளனர்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story