தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2022 12:58 AM IST (Updated: 8 May 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள பூச்சக்காபட்டியை சேர்ந்த சண்முகசாமியின் மகன் விஜய் (வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் இவரது தந்தை சண்முகசாமி பக்கவாத நோய் தாக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வரும் நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ செலவுகளை விஜய் கடன் வாங்கி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடனை திருப்பி அடைக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜய் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் செண்பகலட்சுமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story