அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பொதுத்தேர்வுக்கு தயாராகும் 4 மாணவர்கள்


அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பொதுத்தேர்வுக்கு தயாராகும் 4 மாணவர்கள்
x
தினத்தந்தி 8 May 2022 12:58 AM IST (Updated: 8 May 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

பிரியாணி சாப்பிட்டு வாந்தி-மயக்கம் அடைந்த 4 மாணவர்கள் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

அறந்தாங்கி, 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் ஒரு பிரியாணி கடையில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை தங்களுடைய குடும்பத்தினருடன் சாப்பிட்டனர். அப்போது 41 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஹரிஹரசுதன், பார்த்திபன், அபிநயா ஆகிய 3 பேரும் பிளஸ்-2 வகுப்பும், ராமநாதன் 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவாறே தேர்வுக்கு படித்து வருகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இவர்களது பெற்றோர் அருகிலேயே இருந்து வருகின்றனர்.

Next Story